ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி அப்பாசாமி கிரிக்கெட் கிளப் அணி வெற்றி

கோவை,மே22: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பாக 5வது டிவிஷன் கிரிக்கெட் போட்டி அவினாசி சாலையில் உள்ள சிஐடி கல்லூரியில் நடைபெற்றது.இதில் முதலில் பேட்டிங் செய்த அப்பாசாமி கிரிக்கெட் கிளப் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 292 ரன்கள் எடுத்தது. இந்த அணி சார்பாக விளையாடிய பசீர் அஹமத் 97 ரன்களும்,யாழ் முகில் 60 ரன்களும், பிரதீப் குமார் 35 ரன்களும்,வடிவேல் 31 ரன்களும் எடுத்தனர்.2வது பேட்டிங் செய்த டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி 29.2 ஓவரில் 122 ரன்கள் மட்டுமே எடுத்தது.அப்பாசாமி கிரிக்கெட் கிளப் பணி சார்பாக பந்து வீசிய சவுந்தர் ராஜன் 5 விகெட்களும், பிரதீப் குமார் 3 விகெட்களும் எடுத்தனர்.போட்டியில் அப்பாசாமி கிரிக்கெட் கிளப் அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

The post ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி அப்பாசாமி கிரிக்கெட் கிளப் அணி வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: