×

பிரதமர் நிகழ்ச்சியில் தடையின்றி சுற்றித்திரிந்த பாகிஸ்தான் ஏஜென்ட்: வீடியோ வைரல்

திருமலை: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி வைத்தார். இதற்காக செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பாஜ எம்பிக்கள், மத்திய அமைச்சர்கள் பண்டி சஞ்சய், கிஷன் ரெட்டி மற்றும் அப்போதைய ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் ஏஜென்ட் ஜோதி மல்ஹோத்ரா எந்தவித தடையும் இல்லாமல் சுதந்திரமாக சுற்றி திரிந்து பங்கேற்று எடுத்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. இந்த நிலையில், அரியானா மாநிலம் ஹிசார் எஸ்பி சஷாங்க் குமார் சவான் கூறுகையில், ‘‘ யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு ராணுவம் அல்லது பாதுகாப்பு தொடர்பான எந்த தகவலும் நேரடியாக கிடைக்கவில்லை.

ஆனால், பாகிஸ்தானின் உளவுதுறை ஏஜென்டுகளுடன் அவர் தொடர்பில் இருந்தார். அங்குள்ள யூடியூபர்களுடனும் தொடர்பில் இருந்தார். அவர்கள் பாகிஸ்தான் உளவாளிகளுடனும் தொடர்பு வைத்திருந்தனர். இது போன்றவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை பயன்படுத்துவதும் ஒருவகையான போர்’’ என்றார். இதனிடையே, ஜோதி மல்ஹோத்ராவுக்கும் ஒடிசா மாநிலம் புரியை சேர்ந்த ஒரு பெண் யூடியூபருக்கும் உள்ள தொடர்புகள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

The post பிரதமர் நிகழ்ச்சியில் தடையின்றி சுற்றித்திரிந்த பாகிஸ்தான் ஏஜென்ட்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Prime ,Tirumala ,Modi ,Vande Bharat ,Secunderabad railway station ,Telangana ,BJP ,MPs ,Union ,Secunderabad railway station… ,Minister ,
× RELATED கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்....