மாநகரில் ரூ.21.30 லட்சத்தில் தெருவிளக்கு வசதி

 

கோவை, மே 10: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 56வது வார்டுக்கு உட்பட்ட சிவலிங்கபுரம் பிரதான சாலையில் மாநகராட்சி சார்பில் ரூ.21.30 லட்சம் மதிப்பீட்டில் 25 எண்ணிக்கையில் புதிய தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாநகராட்சி மேயர் ரங்கநாயகி தலைமை தாங்கி, இத்தெருவிளக்குகளை திறந்து வைத்தார்.

பின்னர், மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ரோஸ் கார்டன் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில், கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், உதவி கமிஷனர் முத்துசாமி, உதவி பொறியாளர் கல்யாணசுந்தரம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

The post மாநகரில் ரூ.21.30 லட்சத்தில் தெருவிளக்கு வசதி appeared first on Dinakaran.

Related Stories: