மனைவியுடன் தகாத உறவால் வெறிச்செயல் மர்ம உறுப்பை அறுத்து வங்கி ஊழியர் படுகொலை: போலீசில் கணவன் சரண்

காவேரிப்பாக்கம்: மனைவியுடன் தகாத உறவு வைத்த வங்கி ஊழியரை பைக்கில் அழைத்து சென்று கழுத்து மற்றும் மர்ம உறுப்ைப அறுத்து கொலை செய்து விட்டு காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் கணவன் சரண் அடைந்தார். காஞ்சிபுரம் மாவட்டம், வெப்பேடு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் லுவியரசன் (34). இவரது மனைவி கீர்த்தனா (26). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். லுவியரசனின் உறவினர் அதே பகுதியை சேர்ந்த அருண்குமார்(26). காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் வங்கியில் வேலை செய்து வந்தார். திருமணம் ஆகவில்லை.

இவருக்கும் கீர்த்தனாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த லுவியரசன் மனைவியை அவ்வப்போது கண்டித்துள்ளார். இருப்பனும் கள்ளத்தொடர்பை கைவிடவில்லையாம். இதனால் இருவர் மீதும் லுவியரசன் கடும் ஆத்திரமடைந்தார்.  இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வரலாம் எனக்கூறி அருண்குமாரை லுவியரசன் காஞ்சிபுரத்தில் இருந்து பைக்கில் அழைத்து வந்துள்ளார்.

காவேரிப்பாக்கம் அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தில் ஜல்லி அரவை மில் அருகே வந்தபோது பைக்கை நிறுத்திய லுவியரசன் தனது மனைவியுடனான கள்ளத்தொடர்பு குறித்து கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த லுவியரசன், அருண்குமாரை துணியால் கழுத்தை இறுக்கியுள்ளார். அவர் மயங்கியதும் தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் கழுத்து மற்றும் அவரது மர்ம உறுப்பை அறுத்துள்ளார்.

இதில், அருண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதன்பிறகு நள்ளிரவு காவேரிப்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்ற லுவியரசன், அருண்குமாரை கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்தார். இதையடுத்து, காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்‌.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து லுவியரசனை கைது செய்தனர். பின்னர், அவரை வாலாஜா கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட லுவியரசன் மீது காஞ்சிபுரம் தாலுகா மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் காவல் நிலையங்களில் கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்படத்தக்கது.

The post மனைவியுடன் தகாத உறவால் வெறிச்செயல் மர்ம உறுப்பை அறுத்து வங்கி ஊழியர் படுகொலை: போலீசில் கணவன் சரண் appeared first on Dinakaran.

Related Stories: