கீழக்கரை,மே 7: திருப்புல்லாணி ஒன்றியம் பெரியப்பட்டணத்தில் ரூ.3 கோடி மதிப்பில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நடந்த பூமி பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சியில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் பங்கேற்று புதிதாக அமையவுள்ள விளையாட்டு அரங்குபணிகளை பார்வையிட்டனர். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார், திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய திமுக செயலர் நாகேஸ்வரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் பைரோஸ் கான், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஹபிபுல்லா, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் முஹமது முசால்,பெரியபட்டணம் திமுக கிளை செயலர் அன்ஸார் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post பெரியப்பட்டணத்தில் ரூ.3 கோடியில் விளையாட்டு அரங்கு appeared first on Dinakaran.
