கிருஷ்ணகிரி, மே 5: கிருஷணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் இயங்கும் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பிற்கு அலுவலக பணியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு முதன்மை மாவட்ட நீதிபதியும், தலைவருமான லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் இயங்கும் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பிற்கு அலுவலக பணியாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.
சட்ட உதவி ஆலோசனை அமைப்பிற்கு பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து உரிய ஆணவங்களுடன் வரும் 9ம் தேதி மாலை 5.30 மணிக்குள் பதிவு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கடைசி தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது.
The post அலுவலக பணியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.
