திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.4 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் ரகசிய அறை அமைத்து ரூ.4 கோடி ஹவாலா பணத்தை கடத்திய 2 பேரைப் பிடித்து கேரள போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்த ரூ.4 கோடியை வருமானவரித் துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.