கமுதி அருகே மரத்தில் கார் மோதல் 3 பேர் படுகாயம்

 

கமுதி, ஏப்.29: கமுதி அருகே பனை மரத்தின் மீது கார் மோதி விபத்தில், மூன்று பேர் படுகாயமடைந்தனர். கமுதி அருகே பார்த்திபனூரை சேர்ந்தவர் மாரிச்செல்வம்(44). இவர் நேற்று தனது இல்ல நிகழ்ச்சிக்கு உறவினர்களுக்கு பத்திரிக்கை வைப்பதற்கு, மனைவி மாரிச்செல்வியுடன்(34) காரில் தோப்படைபட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
பசும்பொன் அருகே வந்த போது, கார் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை சாலையோரத்தில் இருந்த
பனைமரத்தில் மோதியது. இதில் காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. இதில் மாரிச்செல்வி, மாரிச்செல்வம், டிரைவர் சதீஸ்குமார்(25) ஆகியோர் காயமடைந்தனர். இது குறித்து கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கமுதி அருகே மரத்தில் கார் மோதல் 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: