புதுக்கோட்டையில் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

புதுக்கோட்டை, ஏப்.28: மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நேற்று புதுக்கோட்டையில் நடைபெற்றது. ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தியும், மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் வருகின்ற மே 20 அன்று அகில இந்திய அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது.இந்தப் போராட்டத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்துவதற்காக போராட்ட ஆயத்த மாநாடு புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. மாநாட்டிற்கு தொமுச மாவட்டத் தலைவர் ரெத்தினம் தலைமை வகித்தார்.

தொமுச மாவட்டச் செயலாளர்.கணபதி சிஐடியு மாநில செயலாளர்.தேவமணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்;.சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.தர் நிறைவுரையாற்றினார்.போராடட்த்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

The post புதுக்கோட்டையில் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு appeared first on Dinakaran.

Related Stories: