மேலும் புதிதாக விதித்த சிறு கனிம நிலவரி விதிப்பை கைவிட வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்நிலையில் சென்னை, தலைமைச் செயலகத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த கல் குவாரி கிரஷர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் குவாரி கிரஷர் உரிமையாளர்கள் முன் வைத்த கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் எம்-சாண்டு, பி சாண்டு மற்றும் ஜல்லி ஆகியவற்றிக்கு ஏற்றப்பட்ட விலையிலிருந்து ரூ.1000 குறைத்து விற்பனை செய்யப்படும் என்பதை அச்சங்கத்தினர் ஏற்றுக்கொண்டனர்.
மேலும், சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33 என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அரசாணை ஒருவார காலத்திற்குள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் பணீந்திர ரெட்டி, புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் சரவணவேல்ராஜ், கிரஷர் சங்கத்தின் தலைவர் சின்னசாமி, சங்கத்தின் உறுப்பினர்கள், புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் இணை இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post எம்-சாண்டு, மணல், ஜல்லி விலையை ரூ.1000 குறைத்து விற்க அரசு உத்தரவு: கிரஷர் உரிமையாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு appeared first on Dinakaran.
