ஓசூர், ஏப்.26: கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் துறை உதவி அலுவலர் சரவணன் மற்றும் அலுவலர்கள், ஓசூர் அடுத்த மத்திகிரி – கர்னூர் ஏரி பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை அதிகாரிகள் நிறுத்தினர். லாரிகளை நிறுத்திய டிரைவர்கள், கீழே இறங்கி தப்பியோடிவிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் லாரிகளை சோதனை செய்தபோது, சட்ட விரோதமாக 5 யூனிட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், மத்திகிரி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கொடுத்த புகரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
The post மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் appeared first on Dinakaran.
