தேன்கனிக்கோட்டை, ஜன.6: தேன்கனிக்கோட்டை தாலுகா, கெலமங்கலம் ஒன்றியம், தொட்டபேளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நேற்று பள்ளி திறக்கப்பட்டது. நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு 3ம் பருவ பாட புத்தகம் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு விலையில்லா பாடபுத்தகம், நோட்டுகள், சீருடை ஆகியவை வழங்கப்பட்டது. மேலும், கற்றலை எளிதாக்கும் வகையில் எண்ணும், எழுத்தும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது.
