நொச்சிக்குளம் விலக்கு -இளமால்குளம் இடையே குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதி

சாத்தான்குளம், ஏப். 26: நொச்சிக்குளம் விலக்கு பகுதியில் இருந்து இளமால்குளம் வரை குண்டும், குழியுமாக காணப்படும் சாலையில் வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சாத்தான்குளத்தில் இருந்து பேய்க்குளம் வழியாக நெல்லை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக பேய்குளம் மற்றும் முனைஞ்சிப்பட்டி, மூலைக்கரைப்பட்டி வழியாக நெல்லைக்கு அரசு பஸ் உள்பட இதர வாகனங்கள் ஏராளமாக சென்று திரும்புகின்றன. இந்த சாலையில் காலை முதல் இரவு வரை எந்நேரமும் போக்குவரத்து காணப்படும். இந்த சாலை அமைத்து 10 ஆண்டுகளுக்கு மேலாவதால் நொச்சிக்குளம் விலக்கு பகுதியில் இருந்து இளமால்குளம் கிராமம் வரை சாலையில் நடுப்பகுதி மற்றும் கரைகளில் துண்டு துண்டாக அரிப்பு ஏற்பட்டு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எதிரே வரும் அரசு பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு வழி விடும்போது அச்சத்திற்குள்ளாவதாக புகார் தெரிவிக்கின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், இந்த சாலையை ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post நொச்சிக்குளம் விலக்கு -இளமால்குளம் இடையே குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Related Stories: