முத்துப்பேட்டை ஒன்றியத்தில் ரூ.3.99 கோடி மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி பணிகள்

*கலெக்டர் மோகனச்சந்திரன் நேரில் ஆய்வு

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் நடைபெற்றுவரும் ஊரக வளர்ச்சித்திட்டப் பணிகளை கலெக்டர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் ஊராட்சியில் (2025-2026) கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதியதாக கட்டப்பட்டுவரும் குடியிருப்பு வீடுகளையும், கீழபெருமழை ஊராட்சியில் அயோத்திதாசன் பண்டிதர் திட்டத்தின் கீழ் ரூ.24.51 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் பாலத்தினை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் முத்துப்பேட்டை அடுத்த விளாங்காடு ஊராட்சி கரையாங்காடு கிராமத்தில் ரூ.24.51 லட்சம் மதிப்பீட்டில் 2024-25-ஆம் ஆண்டு பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை அமைக்கப்படும் பணியினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் இடும்பாவனம் ஊராட்சியில் ரூ.30.10 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சிமன்ற அலுவலகத்தினையும், இடும்பாவனம் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூ.60.30 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்்.

இடும்பாவனம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தினையும் மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டுவரும் பதிவேடுகள் குறித்தும், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சேவைகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து இடும்பாவனம் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில், 108 வாகன சேவையினை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை வட்டாட்சியர் குணசீலி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜலட்சுமி, வெற்றியழகன், ஒன்றிய பொறியாளர் வெங்கடேசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post முத்துப்பேட்டை ஒன்றியத்தில் ரூ.3.99 கோடி மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: