மன்னார்குடி, ஏப். 23: மன்னார்குடி கிழக்கு பகுதியோடு திருவாரூர் சாலையை இணைக்கும் வகை யில் பாமணியாற்றின் குறுக்கே ரூபாய் 7 கோடி மதிப்பில் புதிய கான்கிரீட் பாலம் அமைக்கும் பணிகளை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மன்னார்குடி கிழக்கு பகுதியோடு திருவாரூர் சாலையை இணைக்கும் வண் ணம் பாமணியாற்றின் குறுக்கே புதுப்பாலம் என்று அழைக்கப்படும் கம்பி நடைபாலம் ஒன்று கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அகலம் குறைவான இந்தப் பாலத்தை இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் பாதசாரிகள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். நகரத்தின் வளர்ச்சி, மக்கள் தொகை மற்றும் வாகனங்களின் பெருக்கம் கார ணமாக புதுப் பாலம் என்று அழைக் கப்படும் கம்பி நடைப்பாலத்தை முற்றி லும் அகற்றிவிட்டு கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங் களும் வந்து செல்லும் வகையில் அகலமான புதிய கான்கிரீட் பாலம் ஒன்றை அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நீண்ட வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். திமுக ஆட்சி க்கு வந்தவுடன் மக்களின் கோரிக்கை கண்டிப்பாக நிறைவேற்றி தரப்படும் என தொகுதி எம்எல்ஏவும், அமைச்சர் டிஆர்பி ராஜா உறுதி அளித்திருந்தார்.
தேர்தலில் திமுக வெற்றி பெற்று தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் அமைச்சர் டிஆர்பி ராஜா எடுத்த தொடர் முயற்சி காரணமாக பாமணியாற்றின் குறுக்கே 90 மீட்டர் நீளம் 11.45 மீட்டர் அகலத்திற்கு ரூபாய் 7 கோடி மதிப்பில் புதிய கான்கிரீட் பாலம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து, பாலம் கட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், பாமணியாற்றின் குறுக்கே ரூபாய் 7 கோடி மதிப்பில் புதிய கான்கிரீட் பாலம் அமைக்கும் பணிகளை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், தற்போதைய கோடை காலத்தை பயன்படுத்தி பணிகளை துரிதமாகவும், தரமாகவும் செய்வதோடு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரை ந்து வரும் வகையில் மேற்க்கொள்ளவேண்டும் என அதிகாரிகளிடம் அறிவு றுத்தினார். ஆய்வின் போது, நகர்மன்ற தலைவர் மன்னை சோழராஜன், துணை தலைவர் கைலாசம், நகராட்சி பொறியாளர் ராஜகோபால், நகர்மன்ற உறுப்பினர் சித் ரா ரேவதி சக்திவேல், மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துவேல், மாவட்ட அயலக அணி அமைப்பாளர் ஆர்வி ஆனந்த், தகவல் நுட்ப அணி சமுக வளைத்தள சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் பாக்கிய சாமி, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post மன்னார்குடியில் பாமணியாற்றின் குறுக்கே ரூ.7 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டுமான பணி: அமைச்சர் டிஆர்பி ராஜா ஆய்வு appeared first on Dinakaran.
