நுகர்பொருள் கிட்டங்கியில் சுமை தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்

*திட்ட அறிக்கை தயாரிக்க நடவடிக்கை

மதுரை : மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் ஜெய்ஹிந்த்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 10 கிட்டங்கிகள் உள்ளன. இந்த கிட்டங்கிகளில் இருந்து தான் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. ஜெய்ஹிந்த்புரம் வெங்கடாசலபுரம் கிட்டங்கியில் 8 ஆயிரம் டன் இருப்பு வைக்கும் வகையிலான இட வசதி உள்ளது. இங்கு சுமார் 550சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர்.

இந்நிலையில் நுகர்பொருள் வாணிப கழகம் தரப்பில் அதிக அளவில் பொருட்களை இருப்பு வைப்பதற்காக வாடிப்பட்டி, பாண்டியராஜபுரம் மற்றும் கப்பலூர் பகுதிகளில் 3 தனியார் கிட்டங்கிகளை வாடகைக்கு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், இங்குள்ள சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வேலை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

எனவே, அரசு கிட்டங்கியில் மட்டுமே ரேஷன் பொருட்களை இருப்பு வைக்க வேண்டும் என வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் நேற்று ஒரு நாள் திடீரென அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர்.

The post நுகர்பொருள் கிட்டங்கியில் சுமை தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: