ஊட்டி : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையை கடந்து வலுவிழந்த நிலையில் இதன் தாக்கம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்திலும் நேற்று முன்தினம் மாலை முதல் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு மழை பெய்து வருகிறது.
குறிப்பாக ஊட்டி, மஞ்சூர், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் மேகமூட்டத்துடன் மழை பெய்தது. மேகமூட்டம் காரணமாக மலைப்பாதையில் பயணித்த வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி மெதுவாக சென்றனர்.
ஊட்டியில் நேற்று பகலில் தொடர்ச்சியாக மழை பெய்த நிலையில் நகரில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. சுற்றுலா தலங்களிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது. மழையால் கடும் குளிர் நிலவிய நிலையில் ஜர்க்கின், குல்லா உள்ளிட்ட வெம்மை ஆடைகள் சகிதமாக நடமாடினர்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோடநாட்டில் 19 மிமீ.,யும், குன்னூர் 17 மிமீ.,யும், பதிவாகி இருந்தது. காற்றழுத்த தாழ்வுநிலையாக நீடிப்பதால் நீலகிரி மாவட்டத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கேற்ப மழை நீடித்து வருகிறது. இதனிடைேய கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மிமீ.,யில்: ஊட்டி 5.2, குந்தா 14, அவலாஞ்சி 8, கெத்தை 5, கிண்ணக்ெகாரை 14, பாலகொலா 9, குன்னூர் 17, பர்லியார் 8, கோத்தகிரி 15, கோடநாடு 19, கீழ் கோத்தகிரி 13 என ெமாத்தம் 144.2 மிமீ., மழை பதிவாகியுள்ளது.
