உளுந்தூர்பேட்டை, ஏப். 22: உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது புகைப்பட்டி கிராமம். இக்கிராமத்தில் திருக்கோவிலூர் ரோட்டின் ஓரம் உள்ளது தடிகாரன் கோயில். இக்கோயிலின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் சாமி சிலைகளுக்கு அருகில் இருந்த சிறிய உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். நேற்று கோயிலுக்கு சென்றவர்கள் இதனை பார்த்துவிட்டு எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கோயில் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் பணம் திருடப்பட்ட சம்பவம் புகைப்பட்டி கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post உளுந்தூர்பேட்டை அருகே கோயில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு appeared first on Dinakaran.