மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு இந்த ஆண்டுக்கான புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்த ஊதியப் பட்டியலை நேற்று அறிவித்துள்ளது. மொத்தம் 34 வீரர்கள் இடம் பெற்றுள்ள இந்தப் பட்டியலில் வீரர்கள் ஏ+, ஏ, பி, சி என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். வழக்கம் போல் முன் தேதியிடப்பட்ட இந்த ஒப்பந்தப்பட்டியலில் கடந்த ஆண்டு இடம் பெறாத ஷ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதேபோல் கடந்த ஆண்டு பி பிரிவில் இருந்த ரிஷப் பன்ட் இந்த முறை ஏ பிரிவில் இடம் பிடித்திருக்கிறார்.
ஏற்கனவே ஏ பிரிவில் இருந்த தமிழ்நாடு வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்று விட்டதால் பட்டியலில் இருந்து விடுவிக்கப் பட்டுள்ளார். அதிக வீரர்கள் இடம் பெற்றுள்ள சி பிரிவில் இருந்த ஷிவம் துபே, ஆவேஷ் கான் உட்பட பலர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்தி, துருவ் ஜூரல் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்னளர். மற்றொரு தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் இந்த ஆண்டும் சி பிரிவில் தொடர்கிறார்.
The post கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்தப் பட்டியல்: பிசிசிஐ அறிவிப்பு appeared first on Dinakaran.