அப்போது மணலி பகுதியை சேர்ந்த மனோஜ்குமார்(28) என்பவரும் டிபன் சாப்பிட்டுள்ளார். அரிகரன் தான் சாப்பிட்டதற்கு வியாபாரியிடம் பணம் கொடுத்தபோது மனோஜ்குமார் தனக்கும் சேர்த்து பணம் கொடுக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு அரிகரன், ‘’நீங்க யார் என்று எனக்கு தெரியவில்லை. பிறகு எதற்காக நீங்க சாப்பிட்டதற்கு நான் பணம் கொடுக்க வேண்டும்’ என்று கேட்டுள்ளார்.
இதனால் கோபம் அடைந்த மனோஜ்குமார், அரிகரனை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோயம்பேடு போலீசார் வந்து படுகாயம் அடைந்த அரிகரனை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குபதிவு செய்து மனோஜ்குமாரை கைது செய்தனர்.
The post டிபனுக்கு பணம் கொடுக்க மறுத்த கூலி தொழிலாளிக்கு சரமாரி அடி: வாலிபர் கைது appeared first on Dinakaran.