அதிமுக, பாஜக கூட்டணியில் அமித் ஷா, எடப்பாடி எடுத்திருக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை: நயினார் நாகேந்திரன்

சென்னை: அதிமுக, பாஜக கூட்டணியில் அமித் ஷா, எடப்பாடி எடுத்திருக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டணி ஆட்சி குறித்த கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க நயினார் நாகேந்திரன் மீண்டும் மறுப்பு தெரிவித்தார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்று எடப்பாடி, தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் கூறி வருகின்றனர். அதிமுக-பாஜக கூட்டணியை பிளவுபடுத்த நினைக்க வேண்டாம் என்று நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்தார். கூட்டணி ஆட்சி குறித்த கேள்வியை இனி யாரிடமும் பத்திரிகையாளர்கள் கேட்க வேண்டாம் என்றும் நயினார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post அதிமுக, பாஜக கூட்டணியில் அமித் ஷா, எடப்பாடி எடுத்திருக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை: நயினார் நாகேந்திரன் appeared first on Dinakaran.

Related Stories: