மக்கள் கோரிக்கையை ஏற்று தச்சமொழி- முதலூர் சாலையில் வேகத்தடை

சாத்தான்குளம், ஏப். 17: தச்சமொழி- முதலூர் சாலையில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம்- முதலூர் சாலையில் அங்குள்ள வளைவு பகுதியில் முதலூர் தட்டார் மடம், பொத்த காலன் விளை, விஜயராமபுரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து சாத்தான்குளத்திற்கு வரும் வாகனங்கள் வேகமாக வந்து திரும்புவதால் விபத்து அடிக்கடி நிகழ்வதாகவும், பெரும் விபத்து நிகழும் முன்பு அந்த வளைவு பகுதியில் இரு வேகத்தடைகள் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் வட்டார தமாகா தலைவர் ஐயப்பன் மற்றும் நிர்வாகிகள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் தச்சமொழி வளைவு வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். அதனை ஏற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று தச்சமொழி வளைவு பகுதியில் இரு வேகத்தடைகள் அமைத்தனர். பொதுமக்கள் கோரிக்கை ஏற்று வேகத்தடை அமைத்த நெடுஞ்சாலைத்துறையினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

The post மக்கள் கோரிக்கையை ஏற்று தச்சமொழி- முதலூர் சாலையில் வேகத்தடை appeared first on Dinakaran.

Related Stories: