புதுடெல்லி: டிஜிட்டல் கைது மோசடியில் ஈடுபடும் கும்பலுக்கு எதிராக ஆபரேஷன் சக்ரா-V என்ற அதிரடி சோதனையை சிபிஐ நடத்தியது. ராஜஸ்தான் மாநில அரசின் வேண்டுகோளின் படி இந்த சோதனை 12 இடங்களில் நடத்தப்பட்டது. இந்த சோதனையில் உபியின் மொராதாபாத் மற்றும் மும்பையில் தலா 2 பேர் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் டிஜிட்டல் கைது செய்ததாக பலரையும் மிரட்டி, 42 தவணைகளில் மொத்தம் ரூ.7.67 கோடி பணத்தை பறித்துள்ளனர்.
The post டிஜிட்டல் கைது கும்பலை சேர்ந்த 4 பேர் கைது appeared first on Dinakaran.