சென்னை: 5 நாட்கள் விடுமுறைக்கு பின் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. தமிழ் வளர்ச்சி, செய்தி, அச்சுத்துறை, எழுதுபொருள், மனிதவள மேலாண்மை மானியக் கோரிக்கைகள் மீது இன்று விவாதம் நடைபெற உள்ளது. அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பதில் அளித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.