கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள சிலைக்கு அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, பென்ஜமின், பொன்னையன் மற்றும் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பெருங்குடியில் அம்பேத்கர் சிலைக்கு பாமக செயல் தலைவர் அன்புமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அம்பேத்கரின் உருவப் படத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். பெரியமேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மலர் தூவி மரியாதை செலுத்தினார். சென்னை துறைமுகம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணனும் மலர்தூவி மரியாதை செலுத்தினார். ராஜாஜி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மரியாதை செலுத்தினார்.
The post 135-வது பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை appeared first on Dinakaran.