குவாரி, எம்சாண்ட் உரிமையாளர்கள் நாளை முதல் வேலைநிறுத்த போராட்டம் செய்ய முடிவு

சென்னை: குவாரி, எம்சாண்ட் உரிமையாளர்கள் வரும் 16ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். கட்டுமான பணிக்கு தேவையான கருங்கல், ஜல்லி, எம்.சாண்ட் வழங்கும் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் வரும் 16ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அரசின் புதிய வரி விதிப்புக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் தலைவர் ஆர்.முனிரத்தினம் கூறியதாவது: குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சுமார் 1.50 லட்சம் டிப்பர் லாரிகள் இயக்க முடியாத சூழ்நிலை உருவாகும். கட்டுமான தொழிலை நம்பியுள்ள 90 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்படும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நடைபெறும் கட்டுமான தொழிலுக்கு ஒரு நாளைக்கு சுமார் 3000 லோடு மணல் தேவைப்படும்.

தமிழகம் முழுவதும் நடைபெறும் கட்டுமான தொழிலுக்கு சுமார் 9000 லோடு மணல் தேவைப்படும். மத்திய அரசின் எண்ணூர் துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம் தமிழக அரசின் பொதுப்பணித்துறை கட்டுமான பணிகள், சென்னை தனியார் அடுக்கு மாடி குடியிருப்புகள், பாரத பிரதமரின் சிறிய வீடுகள் கட்டும் திட்டம் போன்ற கட்டுமான பணிகள் மணல் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

எனவே தமிழக அரசு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றி கருங்கல், ஜல்லி, எம்.சாண்ட் போன்ற பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கட்டுமான தொழில் தங்கு தடையின்றி நடைபெற தமிழக அரசு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post குவாரி, எம்சாண்ட் உரிமையாளர்கள் நாளை முதல் வேலைநிறுத்த போராட்டம் செய்ய முடிவு appeared first on Dinakaran.

Related Stories: