12ம் தேதியும் கிராமுக்கு ரூ.25ம், பவுனுக்கு ரூ.200ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8,770க்கும், ஒரு பவுன் ரூ.70,160க்கும் விற்பனையானது. இதன் மூலம் வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது. அதே நேரத்தில் தொடர்ந்து 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.4,360 வரை உயர்ந்தது. இந்த அதிரடி விலையேற்றம் நகை வாங்குவோரை கடும் கலக்கத்தை ஏற்படுத்தி வந்தது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும்.
இதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல், முந்தைய நாள் விலையிலேயே தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில், தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.8,755க்கும், பவுனுக்கு ரூ.120 குறைந்து ஒரு பவுன் ரூ.70,040க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் குறைந்திருந்தது. கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.108க்கும், கிலோவுக்கு ரூ.2 ஆயிரமும் குறைந்து, ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
The post தங்கம் விலையில் திடீர் மாற்றம் பவுனுக்கு ரூ.120 குறைந்தது appeared first on Dinakaran.