நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் ஹெலிகாப்டரில் ஸ்பெயினில் இருந்து சுற்றுலாவிற்கு வந்த குடும்பத்தினர் பயணம் செய்துள்ளனர். ஹெலிகாப்டர் பிற்பகல் 3 மணியளவில் டவுன்டவுன் ஸ்கைபோர்ட்டில் இருந்து புறப்பட்டு தெற்கே பறந்து பல்வேறு இடங்களை பார்த்தபின்னர் ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தை நோக்கி சென்றதாக தெரிகின்றது.
அப்போது திடீரென ஹெலிகாப்டர் தனது கட்டுப்பாட்டை இழந்து நடுவானில் இருந்து கீழே ஆற்றில் விழுந்துள்ளது. இதில் சீமென்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அகஸ்டின் எஸ்கோபார், அவரது மனைவி மெர்ஸ் காம்ப்ருபி மோன்டல் மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் மற்றும் விமானி உயிரிழந்துள்ளனர்.
The post நியூயார்க்கில் ஹெலிகாப்டர் விபத்து: சீமென்ஸ் சிஇஓ குடும்பத்தினருடன் பலி appeared first on Dinakaran.