டெல்லி: டெல்லியில் திடீரென வானிலை மாற்றமாகி புழுதிப்புயல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 15 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டதுடன், பல விமானங்களின் வருகை, புறப்பாடு தாமதம். புழுதிப்புயல் உடன் சேர்த்து லேசான மழையும் பெய்துள்ளது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.