கோவை, ஏப். 11: தமிழக சிறைத்துறை டிஜிபி மகேஷ்வர் தயாள் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சிறைச்சாலைகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக நேற்று கோவை மத்திய சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் சிறை கைதிகளிடம் போதைப்பொருள், செல்போன் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் பயன்பாட்டில் உள்ளதா? என ஆய்வு செய்தார்.
தொடர்ந்து சிறையில் கைதிகளின் நிலை, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கைதிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது கோவை மண்டல சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி, கோவை மத்திய சிறை எஸ்பி செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து டிஜிபி மகேஷ்வர் தயாள் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் சரவண சுந்தரை சந்தித்து பேசினார்.
The post சிறைத்துறை டிஜிபி கோவை மத்திய சிறையில் ஆய்வு appeared first on Dinakaran.