கிராமத்திற்குள் நுழைய முயன்ற காட்டு யானை: சத்தம் எழுப்பி விரட்டிய மக்கள்

 

கோவை, ஏப். 11: கோவை மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் அடிக்கடி நுழைந்து வருகின்றன. இதனிடையே, கடந்த சில நாட்களாக வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, ஒற்றை ஆண் காட்டு யானை உணவு தேடி வெள்ளியங்கிரி மலையடிவாரப்பகுதிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அந்த காட்டு யானை சாடிவயல் அருகே உள்ள சீங்கைப்பதி என்ற பழங்குடியின கிராமத்திற்குள் நுழைய முயன்றது. அப்போது யானை வருவதை கவனித்த அப்பகுதியில் இருந்த மக்கள் கூச்சல் மற்றும் சத்தம் எழுப்பி அந்த யானையை விரட்டினர். சிறிது நேரத்தில் அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதனை அப்பகுதியில் இருந்த ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

The post கிராமத்திற்குள் நுழைய முயன்ற காட்டு யானை: சத்தம் எழுப்பி விரட்டிய மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: