டரன் டரன்: பஞ்சாப்பில் இரு கோஷ்டிகளுக்கு இடையே நடந்த பயங்கர மோதலில் தலையிட்டு சமாதானம் செய்ய முயன்ற சப் இன்ஸ்பெக்டர் சுட்டு கொல்லப்பட்டார். பஞ்சாப் மாநிலம்,டரன் டரன் மாவட்டத்தில் கோட் முகமது கான் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நேற்று முன்தினம் மாலையில் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது பற்றி தகவல் கிடைத்ததும் ஸ்ரீ கோயிந்த்வால் சாஹிப் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் இரு குழுக்களிடையே ஏற்பட்ட தகராறைத் தீர்க்க கோட் முகமது கான் கிராமத்திற்குச் சென்றனர்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர மோதல், துப்பாக்கிச் சண்டையில் முடிந்தது. இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்ற சப் இன்ஸ்பெக்டர் சரஞ்சித் சிங், உதவி சப் இன்ஸ்பெக்டர் ஜஸ்பீர் சிங் துப்பாக்கி சண்டையில் படுகாயமடைந்தனர். உடனே அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சரஞ்சித் சிங் உயிரிழந்தார். உதவி சப் இன்ஸ்பெக்டர் ஜஸ்பீர் சிங் சிகிச்சை பெற்று வருகிறார்.
The post பஞ்சாப்பில் எஸ்ஐ சுட்டுக்கொலை appeared first on Dinakaran.
