யூடியூப் சேனலில் அவதூறாக பேச்சு; யூடியூபர் சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் புகார்

சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்ட தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான டெல்லிபாபு நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் ஏற்றுமதி இறக்குமதி முகவராக தொழில் செய்து வருகிறேன். தற்போது காங்கிரஸ் வடசென்னை மாவட்ட தலைவராகவும், மாநகராட்சி 37வது வார்டு கவுன்சிலராகவும் பணியாற்றி வருகிறேன்.
இந்நிலையில் சவுக்கு சங்கர் கடந்த 6ம் தேதி யூடியூப் சேனல் ஒளிபரப்பிய நிகழ்ச்சியில் அவரது வீட்டில் சிலர் நடத்திய சம்பவத்திற்கு நான்தான் ‘ஓம் சக்தி டிராவல்ஸ்’ நிறுவனத்திடம் வாடகைக்கு கார் புக் செய்து அனுப்பி வைத்ததாக குற்றச்சாட்டினை பதிவு செய்துள்ளார். மக்கள் பிரதிநிதியாக செயல்படும் என்னை ‘யோ’ போன்ற தரக்குறைவான வார்த்தைகளால் ஒருமையில் பேசி பொது வெளியில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதனால் நான் மிகுந்த மனஉளைச்சல் அடைந்துள்ளேன். அவர் வீட்டில் நடந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. அன்று அவர் வீட்டில் நடந்த சம்பவத்திற்கு வந்த வாகனத்திற்கும் எனக்கு எந்தவித சம்மந்தமும் இல்லை. இந்த விவகாரத்தில் தொடர்புபடுத்தி அசிங்கப்படுத்தி என் மீது அவதூறு பரப்பி உள்ளார். எனவே எனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்த யூடியூப் சங்கர் மீதும், அதை ஒளிபரப்பிய யூடியூப் சேனல் மீதும் உரிய நவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post யூடியூப் சேனலில் அவதூறாக பேச்சு; யூடியூபர் சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் புகார் appeared first on Dinakaran.

Related Stories: