பாரதிய பாஷா பரிஷித் விருது; எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு:
இந்திய அளவில் புகழ்மிக்க பாரதிய பாஷா பரிஷித் அமைப்பின் விருது பெறவுள்ள எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு என் பாராட்டுகள், சமகாலத் தமிழிலக்கியத்தின் நன்கு அறியப்பட்ட முகமாக விளங்கி, குறிப்பிடத்தக்க பல படைப்புகளை அளித்து, சாகித்திய அகாதமி விருது, இயல் விருது, கலைஞர் பொற்கிழி விருது உள்ளிட்ட பல உயரிய அங்கீகாரங்களைப் பெற்றுள்ள அவரது எழுத்துப் பணிக்கான மற்றுமொரு ஊக்கமாக இவ்விருது அமையும் என நம்புகிறேன். தமிழ்ச்சமூகத்தின் வளர்ச்சிக்கும், மானுடத்தின் மேன்மைக்கும் உரமாகும் மேலும் பல படைப்புகளை அவரிடம் இருந்து எதிர்நோக்குகிறேன்.

The post பாரதிய பாஷா பரிஷித் விருது; எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: