கடலூர் அருகே அரசுப் பேருந்து – தனியார் பேருந்து மோதி விபத்து: 20 பேர் காயம்

கடலூர்: கடலூர் அருகே ஆலப்பாக்கம் பகுதியில் அரசுப் பேருந்தும் – தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். சென்னையில்-வேளாங்கன்னிக்கு சென்ற அரசு பேருந்தும் , சிதம்பரத்திலிருந்து-கடலூருக்கு வந்த தனியார் பேருந்தும் ஆலப்பாக்கம் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதியதில் தனியார் பேருந்து வயல்வெளியில் இறங்கியது.

இதில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக அருகில் இருந்த கிராம மக்கள், பொதுமக்கள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய விபத்தால் உயிர் சேதங்கள் நிகழவில்லை.

காலையில் சரியான வெளிச்சம் இல்லாத நிலையில் அதிவேகமாக வந்ததால் விபத்து நேர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். தனியார் பேருந்து வாகன கட்டுப்பாடு இல்லாமல் வந்ததாகவும் குற்றம்சாட்டினர். மேலும், விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடைபெற்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

The post கடலூர் அருகே அரசுப் பேருந்து – தனியார் பேருந்து மோதி விபத்து: 20 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: