பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போர் தொடங்கியுள்ளது. இந்த போர் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர். இந்திய ராணுவத்திற்கு முழு ஆதரவை அதிமுக தெரிவித்துள்ளது. இந்திய ராணுவத்துக்கு தேவையான வீரர்களை அனுப்ப விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக தயாராக உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ஆயிரம் இளைஞர்களை திரட்டி இந்திய ராணுவத்துக்கு எனது தலைமையில் செல்ல தயாராக இருக்கிறோம். 10 நாள் துப்பாக்கி பயிற்சி கொடுத்தால் போதும். நாங்களும் களத்தில் இறங்கி போரிட தயார். நாங்கள் நேதாஜி வழி வந்தவர்கள். அவரது நெறிமுறைகளை கடைப்பிடிப்பவர்கள் நாங்கள். இவ்வாறு தெரிவித்தார்.
The post எடப்பாடி உத்தரவு கொடுத்தால் போதும் ஆயிரம் இளைஞர்களை திரட்டி துப்பாக்கி ஏந்தி போருக்கு ரெடி: ராஜேந்திரபாலாஜி உணர்ச்சிமயம் appeared first on Dinakaran.
