குறைந்த வேகத்தில் மீண்டும் எகிறிய தங்கம் விலை.. 2 நாட்களில் சவரனுக்கு ரூ.2,680 உயர்வு: இல்லத்தரசிகள் ஷாக்!!

சென்னை: சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டே நாளில் சவரனுக்கு ரூ.2680 உயர்வு விற்பனையாகி வருகிறது. உலக அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை இருந்ததால், அனைத்து நாடுகளிலும் பங்குச்சந்தை கடந்த 16 ஆண்டுகள் இல்லாத அளவு அதிரடியாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், முதலீட்டாளர்களால் அனைவரும் தங்கம் வாங்குவதில் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஆனால் கடந்த 6 நாட்களாக தங்கம் விலை தொடர் சரிவை கண்டது. அதாவது 6 நாட்களில் தங்கம் விலை ரூ.2,680 குறைந்தது. கடந்த ஏப்ரல் 3ம் தேதி தங்கம் ஒரு சவரன் ரூ.68,480ஆக இருந்த நிலையில், ஏப்ரல் 8ம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.65,800ஆக குறைந்தது.

இந்நிலையில், நேற்று தங்கம் விலை ஒரே நாளில் மட்டுமே இரண்டு முறை உயர்ந்துள்ளது. காலையில் ரூ.520 உயர்ந்திருந்த நிலையில், மதிய வேளையில் தங்கம் விலை மீண்டும் ரூ.960 அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,290க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.66,320க்கும் விற்பனையானது. அதேநேரம் மதிய வேளையில் தங்கம் விலை மீண்டும் ரூ.960 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8410க்கும் சவரன் ரூ.67,280க்கும் விற்பனையானது.

இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.68,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.150 உயர்ந்து ரூ.8,560க்கு விற்பனையாகிறது. கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் 2 நாட்களில் ரூ.2,680 அதிகரித்துள்ளது. அதேபோல சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.107க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை தற்போது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நகைப்பிரியர்கள் தங்க நகைகள் வாங்குவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த விலை உயர்வு நடுத்தர வர்க்கத்தினரை கடுமையாக பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post குறைந்த வேகத்தில் மீண்டும் எகிறிய தங்கம் விலை.. 2 நாட்களில் சவரனுக்கு ரூ.2,680 உயர்வு: இல்லத்தரசிகள் ஷாக்!! appeared first on Dinakaran.

Related Stories: