3 குழந்தைகள், 2 திருமணம், 30 வயது… 12 ஆம் வகுப்பு மாணவனை மதம் மாறி மணந்த பெண்:உபியில் தான் இந்த கூத்து

அம்ரோஹா: உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டம் ஹசன்பூர் வட்டத்தை சேர்ந்தவர் ஷிவானி. 30 வயது இளம் பெண். பெற்றோர் இல்லை. இவர் ஏற்கனவே 2 திருமணம் செய்தவர். அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஷிவானி முதலில் மீரட்டை சேர்ந்தவரை திருமணம் செய்தார். அப்போது ஷிவானி பெயர் ஷப்னம். அந்த திருமணம் விவகாரத்தில் முடிந்தது. அதை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு சாலை விபத்தில் சிக்கி ஊனமுற்ற சைதன்வாலி கிராமத்தில் வசிக்கும் தவுபிக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது ஷிவானிக்கு 3 குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவனுடன் ஷிவானிக்கு காதல் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கணவர் தவுபீக்கிடம் இருந்து விவாகரத்து பெற்றார். அதை தொடர்ந்து முஸ்லிம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறி ஷப்னம் என்ற பெயரை ஷிவானி என்று மாற்றினார். நேற்று அங்குள்ள கோயிலில் 12ஆம் வகுப்பு மாணவனை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் பற்றி கேட்ட போது, இதுவரை சட்டப்பூர்வ புகார்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

The post 3 குழந்தைகள், 2 திருமணம், 30 வயது… 12 ஆம் வகுப்பு மாணவனை மதம் மாறி மணந்த பெண்:உபியில் தான் இந்த கூத்து appeared first on Dinakaran.

Related Stories: