குன்னூர்: இன்ஸ்டாவில் பழகிய மாணவியை மிரட்டி சிறுவன் உல்லாசம் அனுபவித்தான். மாணவியின் 3 பவுன் கம்மலை அடமானம் வைத்து ஆடம்பரமாக செலவழித்த அந்த சிறுவன் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த 16 வயது மாணவி, குன்னூரில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவியின் தாய், வேலை காரணமாக வெளியூரில் வசித்து வருகிறார். மாணவி, தனது தந்தையின் அரவணைப்பில் பள்ளி சென்று வருகிறார். மாணவி, செல்போனை அதிகமாக பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. தந்தை பலமுறை கண்டித்து திட்டி உள்ளார். இதை கண்டு கொள்ளாத மாணவி, படிப்பை விட செல்போன் மோகத்தில் மிதந்துள்ளார். இந்நிலையில் முன்பின் அறிமுகம் இல்லாத 16 வயது சிறுவனுடன் இன்ஸ்டாகிராமில் மாணவி நண்பராக சேர்ந்துள்ளார்.
நாளடைவில் அவர்களது நட்பு காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்திக்க ஆரம்பித்தனர். குறிப்பாக மாணவியின் தந்தை, வேலைக்கு சென்றப்பின் இருவரும் மாணவியின் வீட்டில் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதனிடையே ‘நான் உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன்’ என ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியிடம் சிறுவன் பலமுறை உல்லாசமாக இருந்ததாகவும், உல்லாசமாக இருக்கும் போது அதை தனது செல்போனில் சிறுவன் வீடியோ எடுத்து மகிழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே எனக்கு சிறிது கடன் உள்ளது, எனவே எனக்கு பணம் கொடுக்குமாறு மாணவியிடம் சிறுவன் கேட்டுள்ளான். ஆனால் என்னிடம் இல்லை என மாணவி கூறி உள்ளார். அதற்கு அந்த சிறுவன், ‘பணம் இல்லையென்றால் உனது காதில் அணிந்துள்ள 3 பவுன் கம்மலை கொடு, நான் அடுத்த வாரம் திருப்பி கொடுத்து விடுகிறேன்’ என்று வற்புறுத்தியதாக தெரிகிறது.
காதலனை நம்பிய மாணவி, 3 பவுன் கம்மலை கழற்றி தனது காதலனான சிறுவனுக்கு கொடுத்துள்ளார். கம்மலை அடமானம் வைத்த சிறுவன், அதில் கிடைத்த பணத்தை வைத்து ஆடம்பரமாக செலவு செய்துள்ளான். இந்நிலையில் நாட்கள் கடந்து செல்ல, ஒரு நாள், ‘எனது அம்மா விரைவில் வீட்டுக்கு வர உள்ளார். வந்தால் கம்மல் எங்கே என்று கேட்பார், எனவே எனது கம்மலை திருப்பி கொடு’ என்று அந்த சிறுவனிடம் மாணவி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு காதல் கசந்தது. அப்போது அந்த சிறுவன், உல்லாசமாக இருந்த வீடியோவை காண்பித்து, ‘என்னுடன் உல்லாசமாக இரு’ என மிரட்டி பலமுறை வற்புறுத்தி உல்லாசத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் வெளியூரில் வசிக்கும் தாய் வீட்டுக்கு வரவே, தனது மகள் காதில் அணிந்திருந்த கம்மலை கவனித்த தாய், ‘கம்மல் எங்கே’ என கேட்டுள்ளார்.
அப்போது சமாளித்த மாணவி, ஒரு கட்டத்தில் நடந்த உண்மையை பெற்றோரிடம் கூறி உள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுவன் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post செல்போன் மோகத்தில் மிதந்தார்; இன்ஸ்டாவில் பழகிய மாணவியை மிரட்டி உல்லாசம்: 3 பவுன் கம்மலை அடமானம் வைத்து ஆடம்பரமாக செலவழித்த சிறுவன் appeared first on Dinakaran.