போடி, ஏப்.9: போடி-தேவாரம் சாலை விரிவாக்க பணிகளைத் தொடர்ந்து, மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது. போடி தேவாரம் சாலையில் கடந்த ஆறு மாதமாக இரண்டு கிலோ மீட்டர் தூரம் சாலை விரிவாக்கம், 4 புதிய பாலங்கள், புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடை பெற்று முடிவடைந்துள்ளது.
இப்பணிகள் அனைத்தையும் போடி மாநில நெடுஞ்சாலை துறையினர், தொடர்ந்து சாலை விரிவாக்க பணிகளையும் ஆங்காங்கே சாலைகளுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரப்புகளை அகற்றும் பணிகளையும் கோம்பை எல்லை வரையில் செய்து வருகின்றனர்.
முதற்கட்டமாக போடி அரசு போக்குவரத்து பணிமனை எல்லையில் துவங்கி ரெங்கநாதபுரம், கரட்டுப்பட்டி பிரிவு, தர்மத்துப்பட்டி, மேலசொக்கநாதபுரம் பிரிவு, பொறியியல் கல்லூரி வரை இரு புறங்களிலும் ஆறு மெகா மின் மாற்றிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மின் கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் உயரழுத்த மின் வயர்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
The post போடி-தேவாரம் சாலையில் மின் கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.