காரமடை, ஏப்.9: தமிழ்நாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு எதிராக, கவர்னர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த, 10 மசோதாக்களும் செல்லும் என நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று காரமடை கார் ஸ்டாண்ட் அருகே நகர மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமையில் திமுக மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை தலைவர் மனோகரன் முன்னிலையில் திரண்ட திமுகவினர் கவர்னருக்கு எதிராக கோஷமிட்டனர்.
தொடர்ந்து பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்வில் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ராமுகுட்டி, முன்னாள் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர்கள் செண்பகம், ராம்குமார், மஞ்சுளா தேவி, ராமமூர்த்தி, வார்டு செயலாளர் முத்து சுப்ரமணியம், நிர்வாகி அன்வர் பாட்ஷ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கொண்டாடிய திமுகவினர் appeared first on Dinakaran.