இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு கால நீட்டிப்பு

 

கோவை, ஏப்.9: பிரதமரின் இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டத்தின் கீழ் 12 மாத இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடந்த மார்ச் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது, இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் ஏப்.15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை மாவட்டத்தில் 38 நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டு, சுமார் 837 இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இதில் 10ம் வகுப்பு கல்வித்தகுதியில் 248 இளைஞர்களுக்கும், பிளஸ் 2 கல்வித்தகுதியில் 147 பேருக்கும், டிப்ளமோ கல்வித்தகுதியில் 11 பேருக்கும், பட்டப்படிப்பு முடித்த 410 இளைஞர்கள் மற்றும் ஐடிஐ பயிற்சி பெற்ற 21 இளைஞர்களுக்கும் பயிற்சி வழங்கப்படவுள்ளது. மேலும், இப்பயிற்சியில் 21 வயது முதல் 24 வயது வரை உள்ள இளைஞர்கள் சேர்ந்து பயன்பெறலாம். பயிற்சிக்கு https://pminternship.mca.gov.in/login என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் உதவித்தொகை, அத்தியாவசிய தேவைக்கு ஒரு முறை மட்டும் மானியமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். இந்த உதவித் தொகையோடு கூடுதலாக நிறுவனங்களும் நிதி உதவி வழங்கவுள்ளது. மாவட்ட திறன்பயிற்சி அலுவலகத்தை நேரில் அல்லது 9566531310, 9486447178 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

The post இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு கால நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: