டெல்லி: 30 முதல் 90 நாட்களுக்குள் அனைத்து மசோதாக்கள் மீதும் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பக்கூடிய மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு காலக்கெடு நிர்ணயம் செய்ய தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.