தென்காசி மாவட்டம் பிரிந்து 6 ஆண்டுகளாகியும் வருவாய் கிராமங்கள் இணைக்காததால் அரசு சேவை பெறுவதில் சிக்கல்

*கலெக்டர் கமல் கிஷோரிடம் புகார்

கடையம் : கடையம் அருகே மேல ஆம்பூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், உழவர் உற்பத்தியாளர் குழு தலைவருமான வின்சென்ட் கலெக்டர் கமல் கிஷோருக்கு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டம்- தென்காசி தாலுகா- கடையம் வட்டாரம்- மேல ஆம்பூர் -2, ஆழ்வார்குறிச்சி- 1 மற்றும் ஆழ்வார்குறிச்சி-2, கீழகடையம்-2, கடையம் பெரும்பத்து- 2 ஆகிய வருவாய் கிராமங்கள் நெல்லை மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டத்திற்கு மாறாமல் நெல்லை மாவட்டத்திலேயே உள்ளது.

இதனால் ஆன்லைன் மூலம் மக்கள் பயன்பெறும் அனைத்து அரசு சேவைகளும் கிடைக்கவில்லை. ஆதார் திருத்தம், பிஎம்கிசான் திட்ட திருத்தங்கள், விவசாயிகளுக்கு அரசு வழங்கும் தனித்துவமான அடையாள எண் பதிவு செய்ய முடியவில்லை.

இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆதார் நெல்லை மாவட்டத்திலேயே உள்ளது. தென்காசி மாவட்டம் பிரிந்து சுமார் 6 ஆண்டுகள் ஆகியும் மேற்படி வருவாய் கிராமங்கள் தென்காசியில் இணைக்கவில்லை. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதை சரி செய்ய வேண்டுகிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தென்காசி மாவட்டம் பிரிந்து 6 ஆண்டுகளாகியும் வருவாய் கிராமங்கள் இணைக்காததால் அரசு சேவை பெறுவதில் சிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: