தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டில் 73 நீதிமன்றங்கள் உருவாக்கம்

நீதி நிர்வாகம் மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி பேசியதாவது: தமிழகத்தில் சிறப்பு நீதிமன்றங்களுடன் சேர்த்து 1338 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 73 நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75. அவற்றுள் தற்பொழுது 65 நீதிபதிகளைக் கொண்டு சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக்கிளை செயல்பட்டு வருகிறது.

வரலாற்று சிறப்புமிக்க இந்நீதிமன்றத்தில் தற்பொழுது 14 பெண் நீதிபதிகள் பணியாற்றி வருகிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தியாகும். சிறைகள் நவீனமயமாவதில் தமிழ்நாடு சிறைச்சாலைகளுக்கு ஈடு இணையாக வேறு எந்த மாநில சிறையும் கிடையாது. தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் சிறந்த இடத்தைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

The post தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டில் 73 நீதிமன்றங்கள் உருவாக்கம் appeared first on Dinakaran.

Related Stories: