கோவை, ஏப்.4: இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய கவுன்சிலின் 2025-2026ம் ஆண்டிற்கான உறுப்பினர் தேர்தல் நடந்தது. இதில் கோவை சொடல் டெக் குழும நிறுவனங்களின் மேலாண் இயக்குநர் பாலமுருகன் உறுப்பினராக தேர்வு பெற்றார். இவர் 4வது முறையாக இந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.
மேலும் இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில கவுன்சில் தேர்தலில் தொடர்ந்து 10 முறையும், தென் மண்டல கவுன்சில் தேர்தலில் 5 முறையில் வெற்றி பெற்றார். சிறு குறு தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகள் தீர ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பதாக பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
The post சிஐஐ உறுப்பினராக பாலமுருகன் தேர்வு appeared first on Dinakaran.