காங். கொடி கம்பங்களை அகற்றுங்கள்: செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பரவலாக அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அரசு மற்றும் பொது இடங்களில், நடைபாதைகளில், நெடுஞ்சாலைகளில் நிரந்தரமாக அமைக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 7ம் நாள் அனைத்து கொடிக் கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிறது.

எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணையில் கூறப்பட்டுள்ள இடங்களில் அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கொடிக் கம்பங்களை மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் பகுதியில் உடனடியாக அகற்றி அதன் விவரங்களை தமிழக காங்கிரஸ் கட்சிக்கு அனுப்ப வேண்டும். இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு உயர் நீதிமன்றத்தின் ஆணைக்கு கட்டுப்பட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post காங். கொடி கம்பங்களை அகற்றுங்கள்: செல்வப்பெருந்தகை வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: