தூத்துக்குடி, ஏப். 2: தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் தெர்மல் நகர் இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர். தூத்துக்குடி தெர்மல் நகர் பகுதியைச் சேர்ந்த மந்திரமூர்த்தி தலைமையில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் தேவஆனந்த், முருகன், மதன்ராஜா, அசோக்குமார் உள்ளிட்டோர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அனைவருக்கும் கருப்பு, சிவப்பு சால்வை அணிவித்து வரவேற்ற அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், ‘‘திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையேற்று கட்சியில் இளைஞர்கள் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதே நேரத்தில் 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். அதை அடைய இன்று முதல் தங்களது பகுதியில் திமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி முழுமையாக திமுக கூட்டணி வெற்றிக்கு வலிமை சேர்க்க வேண்டும்’’ என்றார்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பாலகுருசுவாமி, பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர் மேகநாதன், பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப் பிரதிநிதி பாஸ்கர் மற்றும் மணி, அல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் தெர்மல்நகர் இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர் appeared first on Dinakaran.