மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் பங்குனி பிரமோற்சவ பெருவிழா கோலாகலம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி கோயில் உள்ளது. தென்னகத்து தெட்சின துவாரகை என அழைக்கப் படும் இக்கோயில் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாகும். 16 கோபுரங்களு டன் 7 தூண்கள், 24 சன்னிதிகள், ஏழு மண்டபங்கள், ஒன்பது புனித தீர்த்தங்களை உள்ளடக்கி சுமார் 23 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோவில் பிரமாண்டமாக பரந்து விரிந்து கிடக்கிறது. இக்கோயிலில் பெருமாள், ருக் மணி, சத்தியபாமா சமேதராக மாடு மேய்க்கும் கண்ணன் திருக்கோலத்திலும், படிதாண்டா பத்தினி என்றழைக்கப்படும் செங்கமலத் தாயார் தனி சன்னதி யிலும் அருள் பாலிக்கின்றனர்.

இக்கோயிலில் உள்ள பாப்கட்டிங் செங்கமலம் என்கிற பெண் யானை உலக புகழ்பெற்ற யானையாகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக் கோயிலில் அறங்காவலர்குழு தலைவராக கருடர் இளவரசன், செயல் அலுவலராக மாதவன், அறங்காவ லர்குழு உறுப்பினர்களாக மனோகரன், நடராஜன், லதா வெங்க டேசன் ஆகியோர் உள்ளனர்.

இக்கோயிலில் ஆண்டு தோறும் 18 நாட்கள் நடை பெறும் பங்குனி பிரமோற் சவ பெருவிழா பிரசித்தி பெற்ற விழாவாகும். இந்தாண்டுக்கான பங்குனி பிரமோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இவ்விழாவில், விழாவில் கிருஷ்ணா அவதாரத்தின் முக்கிய அலங்காரங் களில் ராஜகோபால சுவாமி வீதி உலா நடத்தப் படும். கொடியேற்றம் நடந்த இரண்டாம் நாளில் புன்னைமர வாகனத்தில் கண் ணன் திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். பல்லக்கு வீதி உலாவில் காளிங்க நர்த்தனத்தில் கிருஷ்ண அலங்காரம் என கிருஷ்ணாவதார காட்சிகளை விளக்கி அலங் காரங்கள் செய்யப்படுகிறது.

அந்த வகையில், பங்குனி பிரமோற்சவ பெருவிழாவின் 16 ஆம் நாளான இன்று வெண்ணைத்தாழி விழா கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணராக பெரு மாள் அருள் பாலிக்கும் கோவிலில் அவரே தவழும் கண்ணனாக கையில் வெண்ணை குடத்தை ஏந்தி பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி வெண் ணைத் தாழி உற்சவம் ஆகும். கிருஷ்ணா வதாரத்தில் குழந்தை கிருஷ்ணர் அருகிலுள்ள வீடுகளில் நண்பர் களுடன் சென்று உரியில் இருக்கும் வெண்ணையை திருடி தின்பதாக புராண கதைகள் கூறுகிறது. இதிலிருந்து அவருக்கு வெண்ணை என்பது மிகவும் பிடித்தமானது என்பதும் அதனை உண்பதற்கு அவர் மிகவும் விரும்புவார் என்பதும் தெரிகிறது.கிருஷ்ணாவதாரத்தில் வாழ்ந்தவர்கள் கிருஷ்ணருக்கு வெண்ணையினை கொ டுத்து அன்பைப் பெற்றனர். அதே போல, மன்னார்குடியில் கிருஷ்ணராக வே தவழ்ந்து வரும் ராஜகோபாலசுவாமிக்கு வெண்ணை வழங்கி அவரது அன்பை பெறுவதற்கு பக்தர்கள் விருப்பம் கொள்கின்றனர்.

பல்லக்கில் வருகின்ற சுவாமி மீது பக்தர்கள் வெண்ணை வீசி வழிபடுவது இங்கு மட்டுமே என்பது குறிப்பிடத் தக்கது. இதற்காகவே வழியெங்கும் ஏராளமானோர் வெண்ணையினை இலையில் வைத்து விற்பனை செய்தபடி வருவார்கள். சாமியின் முன் அலங்காரம் மற்றும் பின் அலங்காரம் ஆகியவை குழந்தை கிருஷ்ணனை கொண்டிருக்கும். சுவாமி வீதி உலா சுமார் மூன்று கிலோ மீட் டர் தூரம் நடத்தப்படும் என்கிற போதும் திரும்ப நின்று வெண்ணை வீசும் பக்தர்களின் கூட்டத்திற்கு இடையில் பல்லக்கு வேகமாக வரும் போதும் கூட சுமார் 5 மணி நேரம் ஆகிவிடும். வழி எங்கும் பக்தர்கள் கூட்டமாகவே இருக்கும். மன்னார்குடி கோவிலில் நடைபெறும் வெண்ணைத்தாழி விழாவில் தவழும் கண்ணனாக வரும் ராஜகோபாலன் மீது பக்தர்கள் வெண்ணை வீசி அன்பை பொழிகின்றனர்.

The post மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் பங்குனி பிரமோற்சவ பெருவிழா கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: