விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் விரும்பும் முகாமில் வழங்க கோரிக்கை

 

கோவை, ஏப். 2: கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 4ம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்த பணிகள் கோவை, பொள்ளாச்சியில் 3 இடங்களில் நடக்கிறது. இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் முகாமில் விருப்பதின் அடிப்படையில் பணியாற்ற வாய்ப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட தலைவர் முகமது காஜாமுகைதீன், செயலர் சாலமன்ராஜ் உள்ளிட்டவர்கள் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்தித்தனர். அப்போது அவர்கள், கடந்த காலங்களில் கோவை மாவட்டத்தில் உள்ள விடைத்தாள் திருத்தும் முகாம்களில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் பணியாற்றும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. எனவே, இந்த ஆண்டும் ஆசிரியர்கள் விரும்பும் விடைத்தாள் திருத்தும் முகாமில் பணியாற்ற வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

The post விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் விரும்பும் முகாமில் வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: